''ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் பாஜகவால் வெற்றி பெறமுடியும்''- மோதி

பட மூலாதாரம், Kevin Frayer
224 சட்டசபை தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி தேர்தல் நடந்தது. மே 15 செவ்வாய்க்கிழமையன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் இன்று (15.05.2018) அறிவிக்கப்பட்டது. 104 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம் (மதச்சார்பற்றது) 37 இடங்களிலும் வென்றுள்ளன.
இரவு 10.45 மணி நிலவரம்
வெற்றி விவரங்கள்
- பாஜக - 103
- காங்கிரஸ் - 78
- மதச்சார்பற்ற ஜனதா தளம் - 37
- கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி - 1
- பகுஜன் சமாஜ் கட்சி - 1
- சுயேச்சை - 1
முன்னிலை : பாஜக - 1.
கர்நாடகத்தில் யாருக்கும் தனி அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை .
இரவு 8.30 மணி நிலவரம் : பிரதமர் மோதி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.
''பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பாதையில் நடைபோடுகிறது. கர்நாடக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை ஹிந்திமொழி பேசிய மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றதாகச் சொல்லப்பட்டது. அது கற்பிதம்.
வட இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, மற்றும் அஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் வெற்றிபெற்றது. பிராந்திய மொழி பேசப்படும் பல மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மக்களுடன் மக்களுக்காக செயல்படும் கட்சி பா.ஜ.க. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் வெறும் அரசியல் லாபங்களுக்காக இந்திய அரசியலமைப்பை, இந்தியர்களின் உணர்வுகளை சேதப்படுத்தும் செயல்கள் வெறும் தேர்தல் அரசியலுக்காக நடைபெற்றன. மாநில-மத்திய அரசுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் மோசமானது.'' என மோதி கூறியுள்ளார்.
மாலை 6.30 மணி நிலவரம் : ஆளுநரை சந்தித்த பின்னர் எடியூரப்பா '' நாங்கள் தான் தனிப்பெரும் வலிமை பெற்ற கட்சியாக உள்ளோம். நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு நூறு சதவீத நம்பிக்கையை கொண்டிருக்கிறோம்'' என்றார்.
''ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம் எல் ஏக்கள் எண்ணிக்கை காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சியிடம் மட்டுமே உள்ளது. சரியான எண்ணிக்கையின்றி பாஜக கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது'' எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வீரப்ப மொய்லி .
மாலை5.30 மணி நிலவரம் : இதுவரை 190 தொகுதிகளுக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி நிலவரம்
- பாஜக - 88
- காங்கிரஸ் - 66
- மதச்சார்பற்ற ஜனதா தளம் - 34
- கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி - 1
- பகுஜன் சமாஜ் கட்சி - 1
முன்னணி நிலவரம்
பாஜக - 16, காங்கிரஸ் - 12, மதச்சார்பற்ற ஜனதா தளம் - 3, சுயேச்சை - 1
கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரையிலான முடிவுகளின் படி எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், '' நாங்கள் தேவகவுடா மற்றும் குமாரசாமியிடம் பேசியுள்ளோம். எங்களது ஆதரவு தெரிவித்துள்ளோம். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் இணைந்து ஆட்சி அமைப்போம் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
மாலை4.30 : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கர்நாடக ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். தன்னுடைய கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக சித்தராமையா கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகௌடாவை மாலை சந்திக்கவுள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மாலை4.15: இதுவரை 154 தொகுதிகளுக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி நிலவரம்
- பாஜக - 78
- காங்கிரஸ் - 50
- மதச்சார்பற்ற ஜனதா தளம் - 24
- கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி - 1
- பகுஜன் சமாஜ் கட்சி - 1
முன்னணி நிலவரம்
பாஜக - 26, காங்கிரஸ் - 28, மதச்சார்பற்ற ஜனதா தளம் - 13, சுயேச்சை - 1
மாலை3.40: இதுவரை 135 தொகுதிகளுக்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி நிலவரம்
- பாஜக - 72
- காங்கிரஸ் - 43
- மதச்சார்பற்ற ஜனதா தளம் - 18
- கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி - 1
- பகுஜன் சமாஜ் கட்சி - 1
முன்னணி நிலவரம்
பாஜக - 32, காங்கிரஸ் - 35 , மதச்சார்பற்ற ஜனதா தளம் - 19, சுயேச்சை - 1
மதியம் 2:40: 85 தொகுதிகளுக்கான வெற்றி நிலவரம் வெளியாகியுள்ளது.வெற்றி நிலவரம் பாஜக- 53, காங்கிரஸ்-26,மதச்சார்பற்ற ஜனதா தளம் -5, கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி-1, முன்னணி நிலவரம்- பாஜக- 53, காங்கிரஸ்-49,மதச்சார்பற்ற ஜனதா தளம் -33, பகுஜன் சமாஜ்-1, சுயேச்சை-1
மதியம் 2:10: வெற்றி நிலவரம், பாஜக- 36, காங்கிரஸ்-9 ,மதச்சார்பற்ற ஜனதா தளம் -4, கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி-1. முன்னணி நிலவரம், பாஜக- 69, காங்கிரஸ்-66,மதச்சார்பற்ற ஜனதா தளம் -35, பகுஜன் சமாஜ்-1, சுயேச்சை-1
மதியம் 1:40: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 26 தொகுதிகளுக்கான வெற்றி நிலவரம் வெளிவந்துள்ளது. பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 1:20: பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12:50: பாஜக எட்டு தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 101 தொகுதிகளிலும், காங்கிரஸ் 69 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன
மதியம் 12:15: பாஜக நான்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
காலை 11:30: பாஜக 114 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 58 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 தொகுதிகளிலும், பகு ஜன் சமாஜ்-1, கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி-1, சுயேச்சை-1 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
காலை 11:00 :பாஜக 112 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்-1, கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி-1, சுயேச்சை-1 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
காலை 10:45 : சி.வி ராமன் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழரான சம்பத் ராஜ், பின்னடைவை சந்தித்துள்ளார். இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் ரகு, 4000 ஓட்டுகள் முன்னிலை பெற்றுள்ளார்.

காலை 10:30:பாஜக-99, காங்கிரஸ்-55, மதச்சார்பற்ற ஜனதா தளம் 36, பகுஜன் சமாஜ்-1, கர்நாடக பிரகணவந்த ஜனதா கட்சி-1, சுயேச்சை-1 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன.

காலை 10:00: காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சித்தராமய்யா சாமுண்டீஸ்வரி மற்றும் பதாமி என இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். பதாமி தொகுதியில் முன்னனியில் உள்ள சித்தராமய்யா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
காலை 9:45: சென்னப்பட்னா தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஹெச் டி குமாரசுவாமி முன்னிலையில் உள்ளார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
காலை 9:25: பாஜக-34 காங்கிரஸ்-17, மதச்சார்பற்ற ஜனதா தளம்- 9 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
காலை 9:18: சாமுண்டீஸ்வரி தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சித்தராமய்யா பின் தங்கியுள்ளார். இத்தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஜி.டி தேவகவுடா முன்னணியில் உள்ளார்.

காலை 9:15: பாஜக-17 காங்கிரஸ்-11, , மதச்சார்பற்ற ஜனதா தளம்- 6 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
காலை 9:00: பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

காலை 8.20: வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று இன்னும் முடிவடையவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், பல தொலைக்காட்சிகள் முன்னணி நிலவரத்தை வெளியிட்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மே 12-ம் தேதி வாக்குபதிவு நடந்தது.
தற்போது கர்நாடகாவில் உத்தேசமாக 4.97 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 52 லட்சம். பெண் வாக்காளர்கள் சுமார் 2 கோடியே 44 லட்சம்.
இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தேர்தலாக மாறியிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பெரிய கட்சிகளுக்குமே மிக மிக முக்கியமான தேர்தலாக உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி,கர்நாடக மாநிலத் தேர்தலை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டிருப்பதற்குக் காரணம், 2019ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இதனைப் பார்ப்பதுதான்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில், 22 மாநிலங்களை பா.ஜ.கவே ஆள்கிறது. பா.ஜ.க வுக்கும் இது முக்கியத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. கர்நாடகவில் இதுவரை ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ள பா.ஜ.கவுக்கு தென் இந்தியாவில் பெரிய இருப்பு இல்லை.
கர்நாடக தேர்தல் தொடர்புடைய செய்திகள்
- கர்நாடகா தேர்தல்: மூன்று கட்சிகளுக்குமே முக்கியமானது! ஏன்?
- கர்நாடகத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு?
- நாடாளுமன்றத் தேர்தலைத் தீர்மானிப்பதில் கர்நாடகத் தேர்தலின் பங்கு என்ன?
- கர்நாடகத் தேர்தல்: திப்பு எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுக்கும் பாஜக
- கர்நாடகத் தேர்தலுக்காக கட்சித் திட்டத்தை மீறுகிறதா பா.ஜக.?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













