செய்தித்தாள்களில் இன்று: டெல்டாவில் துணை ராணுவம், ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமா?

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள், கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம்; ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமா?

பட மூலாதாரம், RAVEENDRAN

தி இந்து (தமிழ்)

தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலீஸ் படையினர் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான மத்திய போலீஸ் படையினர் தங்கியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய எண்ணெய் கிணறுகள் தோண்டும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இதற்காக வடமாநிலங்களில் இருந்து அதிகாரிகளும், பெரிய அளவிளான இயந்திரங்களும் வரவழைக்கப்பட உள்ளதாகவும் மத்திய உளவுத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து தமிழ்.

Presentational grey line

தினத்தந்தி

சந்திரசேகர ராவ்

பட மூலாதாரம், AFP

பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அல்லாத கூட்டாட்சி முன்னணி (பெடரல் பிரண்ட்) என்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் தெலுங்கானா முதல்வரும், ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். ஏற்கனவே சில மாநிலங்களின் தலைவர்களை சந்தித்துள்ள ராவ், தெலுங்கானா மக்கள் தனக்கு அளித்துள்ள அபார ஆதரவு மற்றும் கடவுளின் ஆசியுடன் டெல்லியில் பூகம்பத்தை ஏற்படுத்தப் போவதாகவும், அடுத்த 2, 3 மாதங்கள் நாடு முழுவதும் இதற்காக அலைந்து திரிந்து மாநில கட்சிகளிடம் ஆதரவு திரட்டப்போவதாகக் கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 'பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்' (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்திலிருந்து ஏவுகணை செலுத்தும் சோதனை கோவாவில் வெற்றிகரமாக நடைபெற்றதையடுத்து தேஜஸ் போர் விமானத்துக்கான இறுதி ஒப்புதல் கிடைப்பது மேலும் வேகமெடுக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

கிரண் பேடி

பட மூலாதாரம், Getty Images

சுத்தமாக பராமரிக்கப்படாத கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படாது என்று அறிவித்த புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

குஜராத்தின் உனா பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தலித்துகள் தங்களுக்கு நிலவும் பாகுபாடு மற்றும் மத அடிப்படையிலான வன்முறையை எதிர்த்து போராடும் வகையில் இன்று புத்த மதத்திற்கு மாறுவதற்கு திட்டமிட்டுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: