உலகப் பார்வை: மாலியில் ஜிகாதி தாக்குதல், டுவாரெக் சமூகத்தினர் 30 பேர் பலி
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
ஜிகாதிகள் தாக்குதல்: மாலியில் டுவாரெக் சமூகத்தினர் 30 பேர் பலி

பட மூலாதாரம், AFP
வடகிழக்கு மாலியில் ஜிகாதிகளால் நடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவேறு தாக்குதலில் டுவாரெக் சமூகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று மேனகா பிராந்தியத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.

முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்

அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடரான என்எஃப்எல்லில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஒற்றை கை வீரர் என்ற பெருமையை ஷாகேம் கிரிஃபா பெற்றுள்ளார். இதற்கென நடந்த தேர்வின் ஐந்தாவது சுற்றில் சியாட்டில் சீஹாவ்க்ஸ் அணியினர் ஷாகேம்மை தங்களது அணிக்காக தேர்ந்தெடுத்தனர்.

சிறிய உடையணிந்த பெண்களின் காணொளி ஒளிபரப்பு; சௌதி அரசு மன்னிப்பு

பட மூலாதாரம், AFP
சௌதி அரேபியாவில் நடந்துவரும் ஒரு மல்யுத்த போட்டியின்போது அங்குள்ள பெரிய திரைகளில் சிறிய உடையணிந்த மல்யுத்தப் பெண்களின் முன்னோட்டம் ஒளிபரப்பானதற்கு அந்நாட்டு விளையாட்டு அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின்: நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம்

பட மூலாதாரம், AFP
கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்பெயினின் பாம்ப்லோனா நகரத்தில் நடந்த ஒரு விழாவின்போது 18 வயதான பெண்ணொருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் ஐந்து ஆண்களுக்கு குறைந்த அளவு தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து அந்நகரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












