கூவம் நதியை சீரமைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து (ஆங்கிலம்): கூவம் நதியை சீரமைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?

நதிகளை மீட்பது, புத்துயிர் அளிப்பது ஓர் இரவில் நடந்துவிடாது. கூவம் நதியை மீட்க குறைந்தது 12 ஆண்டுகளாவது ஆகும். சென்னை மக்கள் அனைவரும் நதிகளை மீட்க ஓர் இயக்கமாக ஒன்றிணைய வேண்டும் என்று இந்தியாவின் தண்ணீர் மனிதன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ். நாம் நதிகளை புரிந்துக் கொண்டால் மட்டுமே, நம்மால் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும். நதிகள் குறித்த மரபு சார்ந்த அறிவை வளர்ப்பது அவசியம் என்று மெக்ஸ் முல்லர் பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜேந்திர சிங் பேசியதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தினத்தந்தி: காவிரி மேலாண்மை அமைக்க எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக தினத்தந்தி நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் கூறிய கருத்துகளை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் கர்நாடக அரசுக்கு உடன்பாடு இல்லை என்று விவரிக்கிறது அந்த செய்தி.

தினமணி: நடிகர்களுக்கு எல்லாமும் தெரியாது

பட மூலாதாரம், Facebook
பிரபல நடிகர்களுக்கு எல்லாமும் தெரியாது; அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவது தவறானது என்று நடிகர் சத்யராஜ் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ். நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது அன்றாட செய்திகளாகி வருகின்றன. பிரபல நடிகர்களுக்கு எல்லாமும் தெரியும் என நினைப்பது தவறு. மக்கள் அதை நம்பினால் அது அதைவிட தவறானது. கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வு உருவாகி விடக்கூடாது. புரிதலுடன்கூடிய நாத்திகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று சத்யராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாக விவரிக்கிறது அந்த செய்தி.

தினமலர்

பட மூலாதாரம், தினமலர்

டைம்ஸ் ஆஃப் இந்தியா: காவிரி தீர்ப்பு - இருக்கிறதா நிலத்தடி நீர்?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் 20 டி.எம்.சி அளவிற்கு நிலத்தடி நீர் இருப்பதாக கூறி, காவிரியில் தமிழகத்தின் பங்கை 14.75 டி.எம்.சி குறைத்துள்ளது உச்சநீதிமன்றம். ஆனால், மாநில பொதுப்பணி துறையும், மத்திய நிலத்தடி நீர் வாரியமும் இணைந்து நடத்திய ஆய்வு, காவிரி படுகையில் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இருப்பதாக விவரிக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி. காவிரி படுகையில் உள்ள 239 வருவாய் துணை கோட்டங்களின் நிலத்தடி நீரின் அளவு மோசமாக உள்ளதாக கூறுகிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












