ஆண் குழந்தை பிறப்பதற்கு அரிஸ்டாட்டில் கூறிய யோசனை

வினோதமான உடலுறவு ஆலோசனைகள் கொண்ட 300 ஆண்டுகள் பழமையான புத்தகத்துக்கு ஏலத்தில் பங்கேற்க தடை

பட மூலாதாரம், Hansons Auctioneers

2018இல் ஏலத்தில் விடப்பட தயாராக இருந்த 300 ஆண்டுகள் பழமையான "பாலியல் ரகசியங்கள்" என்ற கையேட்டில் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்கள் உள்ளதன் காரணமாக அது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

1720ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில், இரண்டு பாகங்களைக் கொண்ட தலைசிறந்த படைப்பை படைத்தார். அதில் முதலாவது பாகத்தில் உடலுறவு ரகசியங்கள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளது.

அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கீழே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளாக மிருகங்கள்

படத்துடன் கூடிய விளக்கத்துடன் எழுதப்பட்டுள்ள அந்த கையேட்டில், பெண்கள் "விலங்குகளுடன் உடலுறவு கொண்டால்" அவர்களுக்கு குழந்தைகளாக மிருகங்கள் பிறப்பதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது..

வினோதமான உடலுறவு ஆலோசனைகள் கொண்ட 300 ஆண்டுகள் பழமையான புத்தகத்துக்கு ஏலத்தில் பங்கேற்க தடை

பட மூலாதாரம், Hansons Auctioneers

இத்தாலியில் கடந்த 1512ஆம் ஆண்டு "இழிந்த மற்றும் ஊழல்" புரிந்த ஒரு பெண்ணுக்கு பறவை-போன்ற-குழந்தை பிறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவனை உற்றுநோக்குங்கள்

ஒரு குழந்தையின் முக அமைப்பானது அதன் தாயார் எவ்வாறு கற்பனை செய்கிறார் என்பதை பொறுத்தே உள்ளதாக நம்பப்படுகிறது.

"ஒரு பெண் சரியான வடிவமற்ற உடலையே உற்றுநோக்கி கொண்டிருந்தால் அவளது கற்பனை முடியுள்ள உதடுகள், வியர்வை வழியும் வாய் அல்லது பெரிய உதடுகளுடன் கூடிய வாய் கொண்ட குழந்தையே பிறக்கும்" என்று அந்த கையேடு கூறுகிறது.

இதை எப்படி தவிர்ப்பது?

உடலுறவின்போது பெண் "கணவனை ஆர்வதோடு உற்றுநோக்கி தனது மனதில் பதிய வைத்துக் கொண்டால்" எவ்வித குறைகளும் இன்றி, தந்தையை போன்ற குழந்தை பிறக்கும் என அந்த கையேட்டில் கூறப்பட்டுள்ளது.

வினோதமான உடலுறவு ஆலோசனைகள் கொண்ட 300 ஆண்டுகள் பழமையான புத்தகத்துக்கு ஏலத்தில் பங்கேற்க தடை

பட மூலாதாரம், Hansons Auctioneers

சரியான உணவை சாப்பிட வேண்டும்

உடலுறவில் சிறப்பாக ஈடுபட வேண்டுமென்று நினைக்கும் ஆண்களுக்கேற்ற உணவு வகைகள் குறித்து அந்த கையேட்டில் விளக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக முட்டைகள், குருவி, பிளாக்பெர்ட்ஸ், கன்னட் ஸ்னேப்பர்ஸ், த்ருஷஸ், பாக்டீஜ்கள், பர்கின்ஸ், இளம் புறா, இஞ்சி மற்றும் டூனிப்ஸ் போன்ற காய்கறிகள் மற்றும் பல விதமான பாடும் பறவைகளை சாப்பிட வேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கலவியில் ஈடுபடுவதற்கு விருப்பமுடைய பெண்கள் "கடினமான, கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் காரமான உணவுப்பொருட்களை" உண்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அவசரப்பட வேண்டாம்

"ஆண் இயற்கையான தேவையை நிறைவுசெய்த பிறகு, பொறுமையாக செயல்பட வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வினோதமான உடலுறவு ஆலோசனைகள் கொண்ட 300 ஆண்டுகள் பழமையான புத்தகத்துக்கு ஏலத்தில் பங்கேற்க தடை

பட மூலாதாரம், Hansons Auctioneers

பாலினத் தேர்வு

பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால், உடலுறவில் ஈடுபட்ட பின்னர் பெண் தனது இடப்பக்கம் சாய்ந்தும், ஆண் குழந்தை வேண்டுமென்றால் வலப்பக்கம் சாய்ந்தும் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், "சூரியன் சிம்மத்திலும், சந்திரன் கன்னி, விருச்சிகம் அல்லது தனுசுவில்" இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாம் என்றும், பெண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், " சந்திரன் மங்கும் நேரத்திலும், துலாம் அல்லது கும்பத்தில் இருக்கும்போதும்" உடலுறவில் ஈடுபடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கையேட்டில் ஆண்கள் உலக அதிசயத்தில் ஒன்று என்றும், அவர்களின் கீழ்தான் அனைத்தும் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :