கட்டாய குடும்ப கட்டுப்பாடு: ஜப்பானை நீதிமன்றத்தில் ஏற்றும் பெண்
1970களில் பதின்ம வயதினராக இருந்தபோது தன்னை கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாடு செய்தது தொடர்பாக ஜப்பானிய பெண்ணொருவர் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பட மூலாதாரம், CARL DE SOUZA/AFP/GETTY IMAGES
மனநலப் பிரச்சனை அல்லது குறிப்பிட்ட உடல்நலக் குறைவு காரணமாக, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 25 ஆயிரம் பேரில் ஒருவர்தான் இவர்.
பெரும்பாலோரின் சம்மதம் இல்லாமலேயே இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சிலர் 9 வயது சிறாராக இருந்துள்ளனர்.
இவர்கள் இவ்வாறு நடத்தப்படுவதற்கு காரணமாக இருந்த ஜப்பானிய குறைபாடு இல்லாத ஜீன்களை மட்டுமே இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கும் சட்டம் 1996 ஆம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது.
"பரம்பரையான பலவீனமான மனநிலை" என்று அழைக்கப்படும் நோய் இருப்பது கண்டறியப்பட்டு மலட்டு தன்மைக்கு ஆளாக்கப்பட்டது அறிய வந்த பின்னர் தற்போது 60 வயதுகளில் இருக்கும் இந்தப் பெண் நீதிமன்ற படியேறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








