நாளிதழ்களில் இன்று: 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை கடும் உயர்வு

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்

தினத்தந்தி:

பெட்ரோல், டீசல்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதையடுத்து உற்பத்தி வரியைக் குறைக்கும்படி நிதி அமைச்சகத்தை எண்ணெய் அமைச்சகம் கேட்டுக் கொண்டு உள்ளது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது எனவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

தினமணி:

டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழகத்தில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் இயங்க அனுமதியளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தினமணி செய்தி கூறுகிறது.

Presentational grey line

தினமலர்:

பஸ் பாஸ்

பட மூலாதாரம், Getty Images

அரசு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

தி இந்து(தமிழ்)

ஹாதியா

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

கேரளாவைச் சேர்ந்த ஹாதியா வழக்கில் வேறு எந்த அம்சங்களையும் விசாரிக்கத் தடையில்லை, ஆனால், ஹாதியா, ஷாபின் ஜஹானை திருமணம் செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தக் கூடாது என்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தி இந்து தமிழ் செய்தி கூறுகிறது.

Presentational grey line

டைம்ஸ் ஆப் இந்தியா:

அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழக முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்றும், மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :