பத்மாவதி படம்: பாஜக ஆளும் மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?
பத்மாவதி படத்திற்கு நான்கு மாநிலங்களில் விதிக்கப்பட்டு இருந்த தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
இம்மாதம் 25 ஆம் தேதி, பத்மாவதி திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் தணிக்கை துறை சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு தடை விதித்தன.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர் இப்படகுழுவினர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.
அந்த தீர்ப்பில்,"மாநிலங்கள் படத்திற்கு தடை விதிப்பது, கூட்டாட்சியை ஒழிப்பதற்கு ஒப்பானது. இது ஒரு முக்கியமான விஷயம். யாருக்காவது ஏதேனும் பிரச்னை என்றால், நிவாரணத்திற்காக அதற்கான உரிய தீர்ப்பாயத்தை அணுகலாம். மாநிலங்கள் ஒரு படத்தின் உள்ளடகத்தில் கை வைக்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை விலகியதை அடுத்து திரைப்படம் திட்டமிட்டவாறு அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தப் படம் வெளிவருகிறது.
காணொளி: சட்டத்தை கையில் எடுப்பது முறையல்ல: பத்மாவதி பற்றி பிரகாஷ்ராஜ்
பிற செய்திகள்
- போலீஸ் சுட்டது 338 ரவுண்டு... ஆனால் வீரப்பனை தாக்கியது 2 தோட்டாக்களே!
- மன ஆரோக்கியத்தை சோதிக்க டிரம்ப் செய்த பரிசோதனையை நீங்களும் செய்யலாமே!
- `சிறந்த பொய் செய்திகள்`: விருதுகளை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
- ஆரஞ்சு நிறமாக மாறப்போகும் 'பாஸ்போர்ட்': காரணம் என்ன?
- லோயா மரணம் குறித்த சர்ச்சையும், அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













