நாளிதழ்களில் இன்று: நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசஃப் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படும் முதல் பெண் வழக்கறிஞர் எனும் பெருமையை இந்து மல்கோத்ரா பெறுகிறார்.

தினகரன்
இஸ்ரோ தயாரித்த 100வது செயற்கைகோள் உள்பட, 31 செயற்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-40 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா, பின்லாந்து, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் செயற்கை கோள்களும் இன்று ஏவப்படும் ராக்கெட் சுமந்து செல்லும் செயற்கைகோள்களில் அடக்கம்.

தினத்தந்தி
தினத்தந்தி உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதிவிக்கானவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யவும், தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்கவும் வகை செய்யு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ளார்.

தினமணி

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து தினமணி நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது. இந்தியாவில் 10,189 பேருக்கு ஓர் அரசு மருத்துவரும், 90,343 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனையும் இருப்பதுதான் தற்போதைய நிலை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
முல்லை பெரியாறு அணையில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஒன்றைத் தயார் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த அணையின் உறுதித் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க தனித் தனியாக குழுக்களை அமைக்குமாறு தமிழக மற்றும் கேரள அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












