ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாலத்தீன பதின்வயதினர்

பட மூலாதாரம், AFP
இஸ்ரேல் காவல் படையினர் உடன் ஏற்பட்ட மோதல்களில், காஸா மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரை பகுதிகளில், இஸ்ரேல் படையினரால் இரண்டு பாலத்தீன பதின்வயதினர் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் குடியேறியவர்களை வசைபாடிய டிரம்ப்
அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிகவும் மோசமான வசைச் சொற்களில் விமர்சனம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
வியாழனன்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் பேசியபோது, "இந்த மலத்துளை நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளவர்களை நாம் ஏன் வைத்திருக்கிறோம்?" என்று அவர் கேட்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இரான் மீது மேலும் தடைகள்?
இரான் மீது புதிய தடைகளை அதிபர் டிரம்ப் விதிப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்டீவ் நுச்சின் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AFP
2015-இல் இரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, இரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதை ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க டிரம்ப்க்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிகிறது.

நைஜீரியாவில் கலவரம்
நைஜீரியாவில் கால்நடை வளர்க்கும் நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், வேளாண் குடிகளுக்கும் இடையே சமீப வாரங்களில் ஏற்பட்ட மோதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், AFP
அந்நாட்டின் மத்திய மாகாணமான பென்வே-இல் அவர்களில் 70 பேரை ஒரே இடத்தில புதைக்கும் இறுதிச் சடங்கு நடைபெற்று வருகிறது.

ஜப்பான் அருகே சென்ற சீன போர்க்கப்பல்
கிழக்கு சீனக் கடல் பகுதியில் உள்ள பிரச்சனைக்குரிய தீவுகளுக்கு அருகே சீனாவுக்கு சொந்தமான போர் கப்பல் சென்றதைத் தொடர்ந்து, தங்கள் நாட்டுக்கான சீனாவின் தூதரை அழைத்து ஜப்பான் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், AFP
அந்தத் தீவுகள் ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சீனாவும் உரிமை கோரி வருகிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












