பதான்கோட் தாக்குதல் நினைவு: "என் மகன் நாட்டுக்காக உயிர் நீத்தார்"

"என் மகன் நாட்டுக்காக உயிர் நீத்தார்"

பட மூலாதாரம், COPYRIGHT GURSEWAK SINGH FAMILY / BBC

    • எழுதியவர், அரவிந்த் சாபடா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"2016 ஆம் ஆண்டின் முதல்நாளில் அவர் என்னோடு பேசினார். அடுத்தநாள், அவர் இறந்துவிட்டார்". பதான்கோட் தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குர்சேவக் சிங்கின் குடும்பத்தினர் மனசோர்வுடன் உள்ளபோதிலும், நாட்டின் பெருமையை காப்பாற்றுவதற்காக மகன் சண்டையிட்டு உயிரிழந்ததை அவர்கள் பெருமையாகவே கருதுகின்றனர்.

"நீங்கள், படுக்கையில் அமர்ந்திருக்கும்போது கூட, உயிரிழக்கலாம். ஆனால் என் மகன், நாட்டிற்காக போராடி உயிரிழந்துள்ளார். அதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்" என்று கூறுகிறார், கர்வுத் கமாண்டோ கார்ப்பரல் குர்சேவக் சிங்கின் தந்தையான சுசா சிங்.

குர்சேவக்கின் குடும்பத்தினர், அம்பாலாவிலுள்ள கர்னாலா கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில், பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த சண்டையில், அவர் உயிரிழந்தார்.

குர்சேவக்

பட மூலாதாரம், COPYRIGHT GURSEWAK SINGH FAMILY / BBC

"ஜனவரி 1ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு அவர் என்னோடு தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், ஜலந்தரில் உள்ள அதம்பூர் தளத்தில் பணியில் இருந்தார். வீட்டிற்கு வருவாரா என்று நான் கேட்டேன், அதற்கு, அடுத்த சில நாட்களுக்கு வரமுடியாது என்றார். அடுத்தநாள், அவரின் வீரமரணம் குறித்த செய்தி வந்துசேர்ந்தது." என்று தெரிவித்தார்.

மரணமடைவதற்கு 1.5 மாதங்களுக்கு முன்பே, குர்சேவக்கிற்கு திருமணம் நடந்திருந்தது. "அவரின் மனைவி ஜஸ்பிரீத்திற்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது, அந்த குழந்தைக்கு ஒரு வயதிற்குமேல் ஆகிறது. அவளுக்கு குர்ரீத் என்று பெயர் வைத்துள்ளோம்."

"அவள் மிகவும் சின்னக்குழந்தைதான். ஆனாலும், வருங்காலத்தில், தந்தையைப் போல, அவளும் விமானப்படையில் இணைய விரும்பினால், எங்களுக்கு எந்த பிரசனையும் இல்லை. அவளின் பெயரை, குர்சேவக் தம்பதி ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தது." என்கிறார் அவர்.

குவ்சேவக்கின் தந்தை, ராணுவத்தில் பணியாற்றிவர், தற்போது விவசாயம் செய்துவருகிறார்.

பதான்கோட் தாக்குதல்

பட மூலாதாரம், EPA

"அவரின் மரணம் எங்களை உடைத்துவிட்டது. பயங்கராவதிகள், எவ்வளவு மக்களை கொல்கிறோம் என்பதை மட்டுமே கவனிக்கிறார்கள். யார் சாகிறார்கள் என்பதை கவனிப்பதில்லை" என்று கூறுகிறார்.

2016ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி, பதான்கோட் விமானப்படை தளத்தினுள், இந்திய ராணுவப்படை ஆடையில் துப்பாக்கிதாரிகள் நுழைந்தனர்.

அடுத்தநாள் காலைவேளையில், அவர்கள், அங்கு கண்டறியப்பட்டனர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது குழுவே இதற்கு காரணம் என்று, இந்தியா குற்றம்சாட்டியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில், ஆறு துப்பாக்கிதாரிகளும், ஏழு பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு, கால்களுடன் வளரும் காலணிகள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :