`லவ் ஜிஹாத்`: தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஹாதியா

ஹாதியா

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

மதம் மாறி திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில், மிகவும் பிரபலமாக பேசப்பட்ட இந்திய பெண், மீண்டும் கல்வியைத்தொடர, தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்து குடும்பத்தில் பிறந்த ஹாதியா, இஸ்லாம் மதத்திற்கு மாறி, இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டார்.

இந்து மதத்திற்கு எதிரான சதியின் ஒருபகுதியாக, ஹாதியா மூளைச்சலவை செய்யப்பட்டதாக அவரின் தந்தை தெரிவித்தார்.

கடந்த மே மாதம், அவரின் திருமணம் ரத்து செய்யப்பட்டதோடு, ஹாதியாவின் தந்தை பாதுகாவலராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் இன்று, இந்திய உச்சநீதிமன்றம், ஹாதியாவின் நேரடி வாக்குமூலத்தை கேட்டது. அதில் அவர், தனக்கு சுதந்திரம் வேண்டுமென்றும், தன் கணவரை பார்க்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

தன்மீது தவறுள்ளது என்ற குற்றச்சாட்டை, ஹாதியாவின் கணவர் எப்போதுமே மறுத்து வந்துள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :