குஜராத் மாதிரி வளர்ச்சி பைத்தியகாரத்தனமான வளர்ச்சியா? - வைரலான ஹாஷ்டாக்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி
    • எழுதியவர், சாகர் பட்டேல்
    • பதவி, பிபிசி குஜராத்தி

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பா.ஜ.க தனது சாதனையாக தற்பெருமை அடித்துக் கொண்ட, `குஜராத் மாதிரி வளர்ச்சி` என்ற வாசகத்தை, பா.ஜ. க விவரித்த கதைகளை முறியடிக்க முடியாமல் திணறினர். ஆனால், இந்த கதைகள் சமூக ஊடக இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தற்பெருமை மிகுந்த சுவரொட்டி வாசகம் `குஜராத் மாதிரி வளர்ச்சி`. சில காலங்களுக்கு முன்பு இந்த வாசகம் பெரிதாக பேசப்பட்டது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பா.ஜ.க இந்த வாசகத்தை கூறி வந்தது.

இந்த வாசகம் குறிக்கும் குஜராத்தின் வளர்ச்சி, உள்ளூர் பொருளாதார நிபுணர்கள் முதல் வெளிநாட்டி பொருளியல் அறிஞர்களால் கொண்டாடப்பட்டது. இதனால், குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோதி இந்தியாவின் பிரதமராக ஆனார்.

அவரது கட்சியினர், நரேந்திர மோதியின் சாதனைகளுக்கு இந்த வாசகமே சாட்சியம் என்றனர். இதனால், `குஜராத் மாதிரி வளர்ச்சி` என்ற வாசகம் நாடு முழுவதும் பரவலானது. பரபரப்பாக பேசப்பட்டது.

பைத்தியகரத்தனமான வளர்ச்சி:

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பா.ஜ.க தனது சாதனையாக தற்பெருமை அடித்துக் கொண்ட, `குஜராத் மாதிரி வளர்ச்சி` என்ற வாசகத்தை, பா.ஜ. க விவரித்த வளர்ச்சிக் குறித்த கதைகளை முறியடிக்க முடியாமல் திணறினர். ஆனால், இந்த கதைகள் சமூக ஊடக இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர்கள் வேறு மாநிலத்தவர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நகைச்சுவையான சமூக ஊடக இடுகைகள், நக்கலடிக்கும் மீம்ஸ்கள், மற்றும் சின்ன சின்ன ஒலி ஒளி காட்சிகள் மூலம் பா.ஜ.க-வை திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு ஹாஷ்டாக்குடன் பகிரப்படுகிறது.

அந்த ஹாஷ்டாக் 'விகாஸ் கான்டோ தையோ சே`. இதன் பொருள்,`வளர்ச்சி பைத்தியகாரத்தனம் ஆகிவிட்டது`. இது கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் தேர்தல் இருக்கும் நிலையில், இது குஜராத்தில் ஆளும் பா.ஜ.கவிற்கு நல்ல செய்தி அல்ல.

அமித் ஷா - நரேந்திர மோதி

பட மூலாதாரம், AFP/Getty Images

இந்த முழக்கத்தை விரைவில் காங்கிரஸ் சுவீகரித்துக்கொண்டது. பின், அந்த கட்சி இந்த முழக்கத்தை உள்வாங்கிக் கொண்டு, சொந்தமாக ஒரு முழக்கத்தை உண்டாக்கியது. 'பைத்தியகரதனமான வளர்ச்சியின் கடைசி தீபாவளி இது' என்பதுதான் அவர்கள் உருவாக்கிய முழக்கம்.

முழக்கத்தை உருவாக்கிய இளைஞர்:

உண்மையில் இந்த நகைச்சுவையான முழக்கத்தை உருவாக்கியது காங்கிரஸ் அல்ல.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஓர் இருபது வயது இளைஞர் தாம்தான் இந்த முழக்கத்தை உண்டாக்கியவன் என உரிமை கோருகிறார். இருபது வயது இளைஞரான சாகர் சவாலியா தாம் தான் முதன்முதலாக ஒரு புகைப்படத்தை இந்த முழக்க வாசகத்துடன் சமூக ஊடகத்தின் பகிர்ந்தேன் என்கிறார்.

இண்டஸ் கல்லூரியில் கட்டட கலை படித்துவரும் சாகர், தம் குடும்பத்துடன் அகமதாபாத்தில் வசித்து வருகிறார்.

"இந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சமூக ஊடகத்தில் குஜராத் போக்குவரத்து கழகத்தின் பேருந்து, சாலையில் உள்ள ஒரு பள்ளத்தில் சிக்கி இருக்கும் புகைப்படத்தை இந்த வாசகத்துடன் பகிர்ந்தேன். உடனடியாக அந்த புகைப்படமும், வாசகமும் சமூக ஊடகத்தில் வைரலானது. மாநிலம் மற்றும் மத்தியில் மலிந்து இருக்கும் ஊழலுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்த மக்கள் இந்த வாசகத்தைப் பயன்படுத்த தொடங்கினார்கள்." என்று பிபிசியிடம் தெரிவித்தார் சாகர்.

இந்த வாசகம் இந்தளவுக்கு பரவலாகும் என்று உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை என்கிறார் அவர்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சாகரும் முன்பு மோடியின் விசுவாசியாக இருந்தவர். மோடியை ஆதரித்தவர். `முன்பு' என்பதை பல காலங்களுக்கு முன்பு என்று நினைத்துவிடாதீர்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான். சாகரின் வார்த்தைகளிலேயே கேளுங்கள், "நான் நரேந்திர மோதியின் தீவிரமான ரசிகனாக இருந்தேன். 2014-ம் ஆண்டு தேர்தலில், நான் பா.ஜ.கவின் தன்னார்வலராக பணியாற்றினேன்." என்கிறார்.

ஏன் விசுவாசத்தை மாற்றினேன்?

பாடிதார்கள் மீது போலீஸ் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நிகழ்வு சாகர் மனம் மாற காரணமாக இருந்திருக்கிறது. அவர் சொல்கிறார், "போலீஸ் படிதார்கள் மீது மேற்கொண்ட தாக்குதலைக் கண்டு, பா.ஜ.க மீதான என் நம்பிக்கையை இழந்தேன். அந்த பேரணிக்கு அடுத்த நாள் என் வீடும் மோசமாக சேதப்படுத்தப்பட்டது."

ஹர்திக் படேலுடன் சாகர்

பட மூலாதாரம், Sagar Savaliya

படக்குறிப்பு, ஹர்திக் படேலுடன் சாகர்

சாகர் சொல்லும் பட்டிதர்கள் பேரணி அகமதாபாத்தில் அகஸ்ட் 25, 2015 நடந்தது. ஏறத்தாழ 5 லட்சம் பாடிதார்கள் அந்த பேரணியில் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பாடிதார்களின் கோரிக்கை தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்பது. ஆனால், போலீஸ் தங்கள் படை பலத்தை, அந்த போராட்டத்தை அடக்கியது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. டஜன் கணக்கான மக்கள் மோசமாக காயமடைந்தனர்.

இந்த சம்பவங்கள்தான் என்னை பாடிதார் அனாமத் அந்தோலன் சமிதியில் இணைய வைத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :