கொள்ளுப்பேரனின் திருமணத்தை நடத்திவைத்தார் கருணாநிதி

தனது மூத்த மகன் மு.க. முத்துவின் பேரனுக்கும் நடிகர் விக்ரமின் மகளுக்கும் இடையிலான திருமணத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலையில் தனது கோபாலபுரம் இல்லத்தில் நடத்திவைத்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் பேரனும் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே. ரங்கநாதனின் மகனுமான மனு ரஞ்சித்திற்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் இன்று காலை தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தை, உடல்நலம் தேறிவரும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி நடத்திவைத்தார்.

இந்தத் திருணத்தில் மு.க. அழகிரி, கனிமொழி, செல்வி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும் விக்ரம் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
கடந்த ஓராண்டாக உடல்நலமின்றி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, சில நாட்களுக்கு முன்பாக முரசொலி அலுவலகத்திற்குச் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார். இது தி.மு.க. தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்தத் திருமண விழாவில் கருணாநிதி பங்கேற்றிருப்பதும் தொண்டர்களால் உற்சாகத்துடன் கவனிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












