ரஜினியும், கமல்ஹாசனும் குழப்புகிறார்களா? டிவிட்டரில் கருத்து யுத்தம்

ரஜினியா? கமலா? யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்ற கேள்வியை முன்னிறுத்தி, பல பதிவுகள் சமூக தளங்களில் உலவுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திற்பு விழாவில், ரஜினி பேசிய கருத்து, கமலுக்கு அறிவுரை கூறும் விதத்தில் உள்ளது என்ற பரவலான கருத்து, சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த கருத்தை ஆதரிக்கும் வகையிலும், ரஜினியை பாராட்டும் வகையிலும் பலரும் தங்களின் கருத்துக்களை நேற்று முதல் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் கருத்துக்களை நடிகர் கமல் டிவிட்டரில் பகிர்ந்ததோடு, காந்தியின் வார்த்தைகள் தற்போது நமக்கு தேவைப்படும் சக்தியை அளிக்கின்றன என தெரிவித்து இருந்தார்.

இந்த பதிவு, மக்களின் கருத்துக்களை ஈர்த்துள்ளது.

மேலும், காந்திய கருத்துகளை அவர் கூறுவதற்கு, அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற எதிர்மறையான பதிவுகளும் எழத்துவங்கியுள்ளன.

அரசியல் குறித்து பேசினாலும், இரு நடிகர்களுமே அடுத்தகட்ட நகர்வு குறித்து தெளிவாக கூறாமல் இருப்பதால், அதற்கான பதிலை எதிர்பார்க்கும் வகையிலான பதிவுகளை அதிகம் காண முடிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :