இந்தியன் 2 - மீண்டும் இணையும் கமல், ஷங்கர் கூட்டணி; ரசிகர்கள் உற்சாகம்

இயகுநர் க்ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான இந்தியன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தயாரிக்கப்படுவது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதில், இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களுடன் இந்தியன் 2 என்ற பெருமைமிகு படத்தில் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு இந்தியன் 2 ஆம் பாகத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக, #Indian2 மற்றும் #Bharateeyudu2 என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று மாலை கமல் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கலாம் என்று திரைத்துறை வல்லுநர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். திரைப்படம் குறித்த அறிவிப்பு கமல் ஹாசன் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

சாமி 2 படத்தின் ஷூட்டிங் தொடக்கம்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தின் ஷூட்டிங் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், விக்ரம் ரசிகர்கள் இதனை சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

2003 ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படம் கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அத்திரைப்படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிகர் விக்ரம் நடித்திருந்தார். தற்போது, அதன் தொடர்ச்சியாக 2 ஆம் பாகத்தை 13 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கிறார் இயக்குநர் ஹரி.

சாமி 2 திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :