மரிலின் மன்ரோ கல்லறை அருகே தன்னை புதைக்க நிலம் வாங்கிய பிளேபாய் நிறுவனர்

உயிரோடிருந்தபோது பிளேபாய் மாளிகையின் அந்தப்புரத்தில் இன்பத்தில் திளைத்திருந்த பிளேபாய் இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர், இறந்த பின்னும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை மரிலின் மன்ரோ கல்லறைக்கு அருகில் உறங்கப் போகிறார்.

பிளேபாய் முதல் இதழின் அட்டைப் படத்திற்காக போஸ் கொடுத்த மரிலின் 1962-ல் மரணித்தார்.

தனது 91 வயதில் இறந்த ஹெஃப்னர், 1992 - ம் ஆண்டே மர்லின் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே தன்னை புதைப்பதற்காக ஒரு இடத்தை 75,000 டாலருக்கு வாங்கி இருக்கிறார்.

அன்றே சொன்ன ஹெஃப்னர்

இந்த விஷயத்தை மக்கள் இரு வேறு விதமாக பார்க்கிறார்கள். சிலர் இதனை நெகிழ்ச்சியான ஒரு விஷயமாக பார்க்கும்போது, வேறு சிலர் இதனை ஒழுக்கக் கேடான விஷயமாக பார்க்கிறார்கள்.

ஹெஃப்னரின் இந்த செயலை சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் புகழ்கிறார்கள்." எல்லையில்லா நேரத்தை மரிலின் அருகில் செலவிடும் இனிமையான வாய்ப்பைத் தவிர்ப்பது மிகவும் கடினமானது," என்று முன்பு ஹெஃப்னர் கூறியதை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

ஆனால், வேறு சிலரோ 1953 டிசம்பர் மாதம் வெளியான பிளேபாய் முதல் இதழுக்காக போஸ் கொடுத்ததற்காக, மரிலின் வெட்கப்பட்டார். தன்னுடைய எதிர்காலம் இதனால் பாதிக்கப்படுமோ என்று அச்சப்பட்டார் என்று கூறுகிறார்கள்.

மரிலின் தனது நடிப்பு தொழிலில் ஏற்பட்ட தொய்வை ஈடுசெய்யவும் மற்றும் பண தேவைகளுக்காகவும் பிளேபாய் இதழுக்காக போஸ் கொடுத்தார். அதற்காக 50 டாலர்கள் ஊதியமாக பெற்றார்.

நன்றி இல்லாதவர்கள்:

`மரிலின் : அவருடைய வார்த்தைகளில் அவரது வாழ்க்கை` (Marilyn: Her Life in Her Own Words) புத்தகத்தில் இவ்வாறாக குறிப்பிடுபட்டுள்ளது : "மரிலினின் நிர்வாண புகைப்படத்தைவைத்து பல கோடி பொருளீட்டியவர்களிடமிருந்து நான் அதற்கான நன்றியை பெறவில்லை. என் படம் வெளியான முதல் இதழை எனக்கு யாரும் தரவில்லை. அதன் பிரதியை நான் தான் வாங்கினேன். "

இறப்புக்கு பிந்தைய தன் திட்டன் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸூக்கு ஒரு முறை பேட்டிக் கொடுத்த ஹெஃப்னர், "லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெஸ்ட்வுட் வில்லேஜ் நினைவு பூங்காவில் திரை பிரபலங்களான நடாலியா வுட், டீன் மார்ட்டின் மற்றும் ஃபரா ஃபாவ்செட்டும் ஆகியோர் உட்பட தன்னுடைய பல நண்பர்கள் அடக்கம் செய்யபட்டு இருக்கிறார்கள். நான் இந்த உணர்வுகளில் நம்பிக்கை கொண்டவன். எல்லையில்லா நேரத்தை மரிலின் அருகில் செலவிடும் இனிமையான வாய்ப்பைத் தவிர்ப்பது மிகவும் கடினமானது, " என்று கூறி இருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :