You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
100 பெண்கள்: உலகத்தை ஒரு வாரத்தில் பெண்களால் மாற்ற முடியுமா?
பிபிசியின் பிரபலமான, விருது பெற்ற ''100 பெண்கள்'' தொடர் 2017ஆம் ஆண்டில் மீண்டும் புதிய தளத்தில்.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் உத்வேகம் அளிக்கக்கூடிய 100 பெண்கள் பட்டியலில் இப்போது 60 பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாசா விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன், லைபீரியா அதிபர் எலென் ஜான்சன் சிர்லெஃப் மற்றும் இங்கிலாந்து கால்பந்து வீராங்கனை ஸ்டெஃப் ஹக்டன் உட்பட 60 பெண்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 40 பெண்களின் பெயர்கள் அக்டோபர் மாதத்தில் சேர்க்கப்படும்.
உலகம் முழுதும் பெண்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்படும் ''100 பெண்கள்'' தொடரில், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பெண்களை ஊக்குவிப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.
இந்த வரிசையில் கவிதாயினி ருபி கெளர், அமிலத் தாக்குதலுக்கு ஆளான ரேஷம் கான் மற்றும் நடனமணியும், தொலைகாட்சி நட்சத்திரமுமான ஜின் ஜிங் ஆகியோரும் இடம்பெறுகிறார்கள்.
துன்புறுத்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் சமுதாயத்தின் பல துறைகளில் பெண்களின் குறைவான பங்களிப்பு என முடிவில்லாதவை போல தோன்றும் பல்வேறு கதைகள், மனச்சோர்வையும் துயரத்தையும் கொடுப்பவை.
எனவே இந்த ஆண்டின் பெண்களுக்கான இந்த சிறப்புத் தொடரில் இந்த ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமின்மையை சமாளிக்க புதுமையான மாற்றங்களை, யோசனைகளை பெண்களிடமே கேட்கிறோம்.
''100 பெண்கள்'' சிறப்புத் தொடரின் ஐந்தாவது ஆண்டான இந்த ஆண்டு, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தி இருக்கிறோம். அவை:
1. கண்ணுக்கு தெரியாத தடைகள் (glass ceiling),
2. பெண்களுக்கு கல்வியின்மை (female illiteracy),
3. பொது இடங்களில் துன்புறுத்தல் (street harassment),
4. விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் (sexism in sport).
100 பெண்கள் பட்டியலில் உள்ள சிலர், இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். அவர்கள் அக்டோபர் மாதத்தில் நான்கு வாரங்களுக்கு, நான்கு வெவ்வேறு நகரங்களில் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுவார்கள்.
மற்றவர்கள், உலகம் முழுவதும் தங்கள் இடங்களில் இருந்து கொண்டே இவர்களுக்கு ஆதரவும் உத்வேகமும் வழங்குவார்கள்.
ஈடுபாட்டுடன், தங்கள் சொந்த கருத்துக்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் பெண்களில் இருந்து 40 பேரின் பெயர்கள் பிறகு பட்டியலில் சேர்க்கப்படும்.
இந்த சவாலில் 100 பெண்கள் வெற்றி பெற்றால், அதற்கு காரணம் உலகம் முழுவதும் உள்ள பெண்களே. பெண்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள அவர்கள் உதவுவார்கள்.
ஏனெனில், அவர்கள் பார்த்த சிறப்பான யோசனைகளை பகிர்ந்துக் கொள்வார்கள், அல்லது அவர்கள் இதை எதாவது ஒருவிதத்தில் எதிர்கொண்டிருப்பார்கள்.
இவை வெறும் யோசனைகள், பரிந்துரைகள் மட்டுமல்ல. வானொலி, ஆன்லைன், சமூக ஊடகங்களில் 100 பெண்கள் உரையாடுவார்கள்.
'கண்ணுக்கு தெரியாத தடைகள்' சவால், சான் பிரான்சிஸ்கோவிலும், 'பெண்களுக்கு கல்வியின்மை' என்ற சவால், டெல்லியிலும், நைரோபியை சேர்ந்த ஒரு குழுவின் உதவியுடன் லண்டனில் 'பொது இடங்களில் துன்புறுத்தல்' என்ற சவாலும், 'விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம்' என்ற சவால், ரியோவிலும் மேற்கொள்ளப்படும்.
நான்கு நகரங்களில் இந்த சவால்கள் மேற்கொள்ளப்பட்டாலும் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடமிருந்து நாங்கள் கருத்துகளை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம். உரையாடல்களும், உலகளாவியதாக இருக்க வேண்டும்.
"2015 ஆம் ஆண்டில், 30 நாடுகளில், 10 மொழிகளில், 150 விவாதங்கள் நடத்தப்பட்டன. 2016 இல், தகுதியுடைய ஆனால் வெளியில் அறியப்படாத 450 பெண்கள் கண்டறியப்பட்டு விக்கிபீடியாவில் இடம்பெற்றனர். தற்போது 2017 ஆம் ஆண்டில் பெண்களில் பங்களிப்பை ஒரு முழுமையான புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறோம்" என்கிறார் 100 பெண்கள் தொடரின் ஆசிரியர் ஃபியோனா கிராக்.
"திறமையான 100 பெண்கள் ஒரு மாதத்திற்குள் தங்களை வெளிப்படுத்துவார்கள் என்பது அற்புதமான ஒன்றாக இருந்தாலும், பரபரப்பானதாகவும் இருக்கும். அவர்கள் ஒரு மாதத்திற்குள் இதை நடத்திக் காட்டுவார்களா?"
"அற்புதமான விஷயங்கள் நடக்கவிருக்கிறது. ஆனால், திறமையான 100 பெண்கள் வெளிவருவார்களா? அதுவும் ஒரு மாதத்திற்குள் இது நடைபெறுமா என்று கவலையாக இருக்கிறது."
Image 6
பெண் கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது கண்டுபிடிப்புகள் கொண்ட உத்வேகம் அளிக்கும் கட்டுரையுடன் இந்தத் தொடரை தொடங்கினோம்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்