You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நான்கு இந்திய மொழிகளில் விரிவாக்கத்தை தொடங்கியது பிபிசி
பிபிசி செய்திகள், இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் தனது மிகப் பெரிய விரிவாக்கத்தை தொடங்கியுள்ளது.
குஜராத்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் செய்தி சேவைகள் துவக்கப்படவுள்ளன. 1940 -ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிகப்பெரிய விரிவாக்கம் என்று பிபிசி அறிவித்துள்ளது. இந்திய மொழிகளுடன், 7 ஆஃப்ரிக்க மற்றும் கொரிய மொழிகளில் சேவைகள் தொடங்கப்படுகிறது.
https://www.bbc.com/marathi
https://www.bbc.com/gujarati
https://www.bbc.com/punjabi
https://www.bbc.com/telugu
மேலும், பிபிசி ஹிந்தி தொலைக்காட்சி செய்தி, பிபிசி துனியா என்ற பெயரில் மறு துவக்கம் செய்யப்படுகிறது. `இந்தியா நியூஸ்' தொலைக்காட்சியில் தினசரி இரவு இச்செய்திகள் ஒளிபரப்பாகும்.
புதிய சேவைகள், இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் இடம் பெறும். தெலுங்கு தொலைக்காட்சி செய்தி, `பிபிசி பிரபஞ்சம்' என்ற பெயரில் இன்று இரவு முதல் தொடங்குகிறது. இந்த செய்திகள், ஈநாடு டிவி ஆந்திர பிரதேத்திலும் ஈநாடு டிவி தெலங்கானாவிலும் ஒளிபரப்பாகும்.
இது இந்தியாவில் பிபிசியின் குறிப்பிடத்தக்க முதலீடுகளில் ஒரு பகுதியாகும். 2 புதிய தொலைக்காட்சி அரங்குகளுடன் டெல்லியில் விரிவாக்கப்பட்ட செய்தி சேவைப் பிரிவு இதில் உள்ளடங்கும்.
பிபிசி டெல்லி செய்தி சேவைப் பிரிவு, பிரிட்டனுக்கு வெளியே உள்ள மிகப் பெரிய அலுவலகமாகும். இது காணொளி, தொலைக்காட்சி மற்றும் மின்னணு செய்திகள் உருவாக்கத்தில் ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கும் பிரதான மையமாக அமையும்.
இந்தியாவில் ஒரு பெரிய திறன் தேடலை நடத்தி அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது.
பிபிசியின் தலைமை இயக்குநர் டோனி ஹால், இந்த புதிய சேவைகளை துவக்கி வைப்பதற்காக தற்போது இந்தியாவில் உள்ளார்.
ஏற்கெனவே, தமிழ், ஹிந்தி, பெங்காலி மற்றும் உருது மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பிபிசி 28 மில்லியன் மக்களுக்கு செய்திச் சேவையை வழங்கி வருகிறது.
1940களுக்குப் பிறகு நடக்கும் பிபிசி உலக சேவைகளின் மிகப் பெரிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் செய்யப்படும் இந்த முதலீடு பிரிட்டன் அரசு வழங்கிய 291 மில்லியன் பவுண்ட் நிதியின் மூலம் சாத்தியமானது.
பிட்ஜின், அஃபான் ஒரோமோ, அம்ஹாரிக், திக்ரின்யா மற்றும் கொரியன் ஆகிய மொழிகளில் தனது செய்தி சேவையை ஏற்கனவே தொடங்கியுள்ள பிபிசி, யுர்போ, இக்போ மற்றும் செர்பியன் ஆகிய மொழிகளில் விரைவில் சேவைகளைத் தொடங்கவுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை, இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு இந்தியா நியூஸ் தொலைக்காட்சியில் `பிபிசி துனியா' ஒளிபரப்பாகும். `பிபிசி பிரபஞ்சம்' திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஆந்திரா ஈநாடு டி.வியிலும், தெலங்கானா ஈநாடு டிவியிலும் ஒளிபரப்பாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்