ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்திற்கு தலைமை பொறுப்பேற்றுள்ள நீதிபதி ஆறுமுகசாமி 2014ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர்.

கோவையைச் சேர்ந்த இவர், 1974ல் சட்டக்கல்வியில் பட்டம் பெற்ற பின்னர் வழக்கறிஞராக பணியாற்றினார். 1986ல் கோவை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பதவி வகித்தவர், 1991ல் துணை நீதிபதியாகவும், பின்னர் 1998ல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ஆறுமுகசாமி, 2009ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளராக இருந்தார். 2010ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற இவர், 2014ல் ஓய்வு பெற்றார். தற்போது மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

ஜனவரி 2013ல் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜுக்கு நீதிமன்றம் சம்மன் அளித்தபோது அவர் நேரில் ஆஜராகாததால், கடுமையாக அவரை விமர்சித்து, ஜார்ஜ் என்ற பெயரைக் கொண்ட ஆணையர் ஜார்ஜ் மன்னர் அல்ல, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :