மெரீனாவில் ஈழப்போர் நினைவேந்தல் நிகழ்வுக்கு போலீஸ் தடை

ஈழப் போர் தொடர்பான நினவேந்தல் நிகழ்வை மெரீனா கடற்கரையில் நடத்தத் தடை

ஈழப் போர் தொடர்பாக மே 17 இயக்கம் அறிவித்திருந்த நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

மே 17 இயக்கம், ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஈழப் போர் தொடர்பான நினவேந்தல் நிகழ்வை மெரீனா கடற்கரையில் நடத்தத் தடை

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில் சனிக்கிழமையன்று காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2003ஆம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதைக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், மெரீனாவில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டங்கள் நடத்துவதோ, குழுமுவதோ சட்டவிரோதமென்றும் அதனை மீறிச் செயல்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

ஈழப் போர் தொடர்பான நினவேந்தல் நிகழ்வை மெரீனா கடற்கரையில் நடத்தத் தடை

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நாளை நினைவேந்தல் நிகழ்வைக் கண்டிப்பாக நடத்தப்போவதாகத் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் தூண்டுதலால் மாநில அரசு இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஈழப் போர் தொடர்பான நினவேந்தல் நிகழ்வை மெரீனா கடற்கரையில் நடத்தத் தடை

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, மாநில அரசு இந்த நிகழ்வுக்கு அனுமதியளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கலாம், பார்க்க, படிக்க :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்