கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக தோன்றிய ஏ ஆர் ரஹ்மான்
பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்றுவரும் 70வது கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நடிகர்கள் ஸ்ருதி ஹசான், ஜெயம் ரவி உள்ளிட்ட தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

பட மூலாதாரம், Sri Thenandal Films
சர்வதேச அரங்குகளில், இந்திய திரைநட்சத்திரங்கள் என்றாலே பெரும்பாலும் ஐஸ்வரியா ராய், தீபிகா பாதுகோன்,சல்மான் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் அறியப்பட்ட நிலையில், பிரபலமான தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் அடங்கிய படக்குழுவினர் கான் திரைப்படவிழாவில் பங்கேற்றுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில், உலக அளவில் வசூல் சாதனை செய்த பாகுபலி படத்தை போல, சுந்தர் சி யின் இயக்கத்தில், ஆர் ரஹ்மான் இசையுடன், ஸ்ருதி ஹசான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ள வரலாற்று கதையை கருவாகக் கொண்ட 'சங்கமித்ரா' படத்தின் போஸ்டர்கள் கான் விழாவில் வெளியிடப்பட்டன.

பட மூலாதாரம், ARRAHMAN
சங்கமித்ரா படக் குழுவினர் ஒரு செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியுள்ளனர்.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், TWITTER
ஏ ஆர் ரஹ்மான் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் கான் திரைப்படவிழாவில் பங்கேற்ற தருணங்களை நேரலையில் காணொளியாக பதிவிட்டுள்ளார். அதே போல படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












