அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமா வருவதற்கு சீனா எதிர்ப்பு
இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, அங்கு திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Pier Marco Tacca/Getty Images
இந்த விவகாரத்தில் இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை விவகாரம் மேலும் சிக்கலாகும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இந்தியாவிடம் வலியுறுத்தி கூறியுள்ளார்.
ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிற்கு வருகை தந்துள்ளார். தனது எண்ணங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டு, மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அங்கிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறும் சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













