சீனாவில் முஸ்லிம்கள் நீளமாக தாடி வளர்க்க தடை
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் கூறும் நடவடிக்கையால், சீனாவின் மேற்கு பிராந்தியத்தியமான ஜின்ஜியாங்கில் புதிய சட்டங்கள் அமலாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
புதிய சட்டத்தின்படி, உய்குர் இனத்தை சேர்ந்த முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீளமான தாடி வளர்ப்பது ஆகியவற்றின் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் உய்குர் முஸ்லிம் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
சமீப ஆண்டுகளில், ஜின்ஜியாங்கில் விடுதலை கோரும் இஸ்லாமியர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய ஜின்ஜியாங் காவல் துறையினருக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் நடந்தவருகின்றன.
புதிய சட்டங்கள் தங்களது கலாசாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக எண்ணும் உய்குர் இன மக்கள் அச்சப்படுவதாக, விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ராய்ட்ர் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின் படி, புதிய சட்டத்தின் மூலம், குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை பின்பற்றாமல் இருப்பது, வேண்டுமென்றே சட்ட ஆவணங்களை சேதப்படுத்துவது மற்றும் தங்களது மத நடைமுறைகளைப் பயன்படுத்தி மட்டுமே திருமணம் செய்துகொள்வது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜின்ஜியாங்கின் மக்கள் பிரதிநிதிகள் இந்த புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தவுடன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடவுச் சீட்டுகள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் அளிப்பது உட்பட சீன அதிகாரிகள் பல்வேறு தடைகளை விதித்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













