விவசாயிகள் மீது அதிமுகவுக்கு அக்கறையில்லை; தேர்தலில்தான் கவனம் - மு.க. ஸ்டாலின் புகார்

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிவரும் நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனம் ஆர் கே நகர் இடை தேர்தல் பற்றித்தான் உள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள்

பட மூலாதாரம், DMK

டெல்லியில் கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்த அவர், வறட்சி நிதி கோரியும், கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராடிவரும் வேளையில் அதிமுகவினரின் முழுகவனமும் இடை தேர்தலில் வெற்றிபெறுவதை பற்றித்தான் உள்ளது என்று குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சியில்தான் வரலாறு காணாத அளவுக்கு விவசாயிகளின் மரணங்கள் நடந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகளின் மரணங்களை கணக்கீடு செய்யவந்த மத்திய அரசின் குழுவிடம் தமிழக அரசு உண்மை நிலவரத்தை கூறவில்லை என்று குற்றம் சாட்டினார்.

'' 250க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். ஆனால் அதிமுக அரசு எண்ணிக்கையை குறைத்துகூறியுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டு தொகையை கூட தரமுடியாத அரசாக அதிமுக அரசு உள்ளது,'' என்றார் ஸ்டாலின்.

கடந்த ஆறு ஆண்டு காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து சரியான தருணத்தில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்றும் விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக அரசு நடத்தவேண்டும் என்றும் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்