வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக விவசாயிகள் (புகைப்படத் தொகுப்பு )
தமிழக விவசாயிகள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனுபவித்து வரும் இன்னல்களை நேரடியாக களத்திற்கு சென்று பதிவு செய்துள்ளார் எமது செய்தியாளர் முரளிதரன்.
படக்குறிப்பு, தமிழகம் முழுவதும் சராசரியாக 62 சதவீதம் அளவுக்குக் குறைவாக பெய்த மழை, கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் 80 சதவீதம் அளவுக்குக் குறைவாகப் பெய்தது.
படக்குறிப்பு, வறண்டு புதர் மண்டிக் கிடக்கும் வீராணம் ஏரி
படக்குறிப்பு, காவிரி நீர் உரிய காலத்தில் திறக்கப்படாததால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே குறுவைப் பயிர்களைச் சாகுபடி செய்வது பாதிக்கப்பட்டிருந்தது.
படக்குறிப்பு, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரில் சுமார் 76 டிஎம்சி தண்ணீர் வரவில்லை
படக்குறிப்பு, தொலைவிலிருந்து நிலங்களுக்கு பைப் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
படக்குறிப்பு, டெல்டா பகுதியில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை நம்பியிருக்கின்றன.
படக்குறிப்பு, லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
படக்குறிப்பு, ஏக்கருக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடாக அறிவித்துள்ளது தமிழக அரசு
படக்குறிப்பு, வறண்டு கிடக்கும் கால்வாய்
படக்குறிப்பு, இந்த காலகட்டத்தில் இப்பகுதி விவசாயிகள் நெல் அறுவடையை முடித்துவிட்டு உளுந்து விதைப்பைத் துவங்கியிருப்பார்கள்.
படக்குறிப்பு, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதி வரை வந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருக ஆரம்பித்துள்ளன.
படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரியை நம்பியிருந்த 48 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள்.