அடுத்த முதலமைச்சராகிறார் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சியமைப்பது குறித்து நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையில், சசிகலா அணி ஆதரவு எம்.எல்.ஏக்களின் அதிமுக பிரிவு சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரை சந்தித்தார்.

ஆளுநரின் அழைப்பில் பேரில் நடந்த இந்த சந்திப்பை அடுத்து அவருக்கு அமைச்சரவையை அமைக்க ஆளுநர் ராவ் அழைப்பு விடுத்ததாகவும், 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் அவர் நிரூபிக்கவேண்டும் என்று அவர் கூறியிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இன்று மாலையே பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்