சசிகலா பெங்களூரு சிறையில் அடைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மாலை சரணடைந்த அஇஅதிமுக பொதுச்செயலர் சசிகலா நடராஜன் பின்னர் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிபதி அஷ்வத் நாராயணாவின் நீதிமன்றத்தில் சசிகலாவும் அவரது மைத்துனி இளவரசியும் முதலில் சரணடைந்தனர்.

அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும் , சசிகலாவின் அண்ணன் மகனுமான வி.என்.சுதாகரன் சரணடையவில்லை. சற்றுத் தாமதாக பின்னர் அவரும் நீதிமன்றத்தில் சரண்டைந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த மூவருக்கும் சாதாரண வகுப்பு சிறை வசதிகளே அளிக்கப்படும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

காணொளி: ஜெயலலிதா சமாதியில் சசிகலா மும்முறை சபதம்

காணொளி: எம்.ஜி.ஆர் இல்லத்திலும் சசிகலா அஞ்சலி

மேலதிக தகவல்களுக்கு:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்