ஆளுநர் நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் வழக்குத் தொடர முடியும்: சுப்பிரமணியன் சுவாமி

தமிழக முதல்வர் குறித்து தமிழக ஆளுநர் நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி வழக்குத் தொடர முடியும் என பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருக்கிறார்.

சுப்பிரமணியன் சுவாமி
படக்குறிப்பு, ஆளுநர் நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, அரசியல்சாஸனத்தின் 32வது பிரிவின் கீழ் ரிட் வழக்குத் தொடர முடியும் என கூறியிருக்கிறார்.

சுப்பிரமணியன் சுவாமி

பட மூலாதாரம், TWITTER

சசிகலாவை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைக்க வேண்டுமெனக் கூறிவரும் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தும் பேசினார்.

காணொளிக் குறிப்பு, பன்னீர்செல்வம் ஒரு கோழை : சுப்பிரமணியன் சுவாமி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்