அபு முகமது அல் அட்னானியை கொன்றது யார்? அமெரிக்கா, ரஷ்யா இடையே போட்டி
கடந்த மாதத்தில், வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில், இஸ்லாமிய அரசு என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பின் தலைமை பிரசாரகரான அபு முகமது அல் அட்னானி கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.

பட மூலாதாரம்,
அபு முகமது அல் அட்னானி மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட அமெரிக்காவின் வான் வழி தாக்குதல் வெற்றி பெற்றுள்ளதாக பென்டகன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அபு முகமது அல் அட்னானி கொல்லப்பட்ட சமயத்தில், அவர் உயிரிழந்து விட்டதாக ஐ.எஸ். அமைப்பு ஒப்புக்கொண்ட அந்த நேரத்தில், தாங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே உரிமை கோரியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.








