ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி மீது விசாரணை நடத்த வாய்ப்பு

ஃபிரான்ஸின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி, 2012 ஆம் ஆண்டின் தேர்தல் பிரசாரத்திற்கு சட்ட விரோதமாக நிதி ஒதுக்கியதாக கூறிய குற்றச்சாட்டில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என செய்திகள் வந்துள்ளன.

பட மூலாதாரம், Getty

விசாரணைக்கு உட்படுத்தப்படும் அனைவரும் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவிறுத்தியிருப்பதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்; ஆனால் இறுதி முடிவு நீதிபதிகளின் விசாரணையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

சர்கோஸிக்கு எதிரான இந்த வழக்கு, 2012 ஆம் ஆண்டு தேர்தலில், செலவு வரம்பை மீறும் அளவு அவரின் தேர்தல் பிரசாரத்திற்கு சட்டவிரோதமாக நிதி ஒதுக்கீடு செய்த குற்றச்சாட்டில் தொடர்புடையது.

முன்னாள் அதிபரான சர்கோஸி அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். ஆனால் இன்னொரு வலது சாரி நம்பிக்கை நபர் அலைன் ஜூப்பை விட, சர்கோஸி பின் தங்கியுள்ளதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.