2 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் ஸனாவில் கூடிய ஏமன் நாடாளுமன்றம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏமன் நாடாளுமன்றம் முதல் முறையாக தலைநகர் ஸனாவில் கூடியுள்ளது. இந்த நகரம் தற்போது ஹெளத்தி கிளர்ச்சி இயக்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் பிடியில் உள்ளது.

பட மூலாதாரம், Reuters

2014ல் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள அதிபர் அபிட்ராபுமன்சூர் ஹாதியின் அரசு இந்த நகரத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

நாடளுமன்றம் வழியாக கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆட்சியை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்க வேண்டாம் என அது எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அமர்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடுக்கக் கூடும் என்று அதிபர் ஹாதி தெரிவித்தார்.