ஜப்பானில் தாமதமாக கால்பதிக்கும் போக்கிமான் கோ
பெரிய அளவில் வரவேற்பை பெற்று சாதனைப் படைத்துக்கொண்டிருக்கும் போக்கிமான் கோ, ஜப்பானில் உள்ள மெய்நிகர் அரக்கர்களின் ரசிகர்களை பொறுமையை சோதித்த பிறகு, ஒரு வழியாக அறிமுகமாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty
இந்த விளையாட்டு ஏற்கனவே முப்பது நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது ஆனால், விளம்பரதாரர் பிரச்சனை காரணமாக போக்கிமான் உருவான ஜப்பானில் இந்த விளையாட்டு கால்பதிப்பதற்கு தாமதமாகிவிட்டது.
நிஜ உலக சூழலில் பிடிக்கும்படியாக அல்லது சண்டையிடும்படியாக 150 அரக்கர்கள் இந்த விளையாட்டில் உள்ளனர்.
போக்கிமான் கோ ஏற்கனவே உலகின் பிற பகுதிகளில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள போதும், ஜப்பானில் பெறும் வெற்றி முக்கிய குறியீடாக பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் தொழிட்நுட்ப நிறுவனமான சோனியை பின்னுக்கு தள்ளி, அதிகமாக எட்டு பில்லியன் டாலர்கள் உடையதாக இதன் தாய் நிறுவனம் நிடெண்டோவின் பங்கு விலைகள் உயர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.








