ரஷ்யா மீதான நடவடிக்கை: உசைன் போல்ட் வரவேற்பு

பட மூலாதாரம், Reuters
ரஷ்ய தடகள வீரர்களுக்கு எதிரான ஊக்கமருந்து பயன்பாடு குறித்த சர்ச்சையில், ரஷ்யாவின் முறையீட்டை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், ரஷ்ய தடகள வீரர், வீராங்கனைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இரண்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற போல்வால்ட் வீராங்கனை யெலனா இசின்பயெவா, தடகள விளையாட்டுக்கு அதிகாரிகள் இறுதி அஞ்சலி நடத்தியிருப்பதற்காக நன்றி தெரிவிப்பதாக கேலியாகத் தெரிவித்துள்ளார். இதில் பெரும் அரசியல் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முடிவு, மிகவும் சோகமானது என்றும், சூழ்நிலை ஆரோக்கியமற்றது என்றும் தடை தாண்டும் சாம்பியன் செர்ஜி சுபென்கோய் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், உலகின் அதிவேக வீரரான உசைன்போல்ட், இந்தத் தடை நடவடிக்கை கடுமையான செய்தியை அனுப்பும் என்றும், பல பேருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.








