சில்காட் விசாரணை கண்டுபிடிப்புகள்: ஒரு பார்வை

கடந்த 2003-ஆம் ஆண்டில் நடந்த இராக் போரில் பிரிட்டன் ஈடுபட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த சர் ஜான் சில்காட், தனது கண்டுபிடிப்புக்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

 சர் ஜான் சில்காட்,

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சர் ஜான் சில்காட்,

2001 முதல் 2009 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் பிரிட்டன் அரசு எடுத்த கொள்கை முடிவுகள் குறித்து இந்த அறிக்கை விவரிக்கிறது.

இராக் போருக்கு பிரிட்டன் செல்ல முடிவெடுத்ததன் பின்னணி, போருக்கு செல்வதற்கு படைத்துருப்புக்கள் முறையாக தயார் படுத்தப்பட்டார்களா, மோதல் எவ்வாறு நடைபெற்றது, தீவிரவாத வன்முறை நிலவிய அக்காலகட்டத்தில் இதன் பின்னர் என்ன திட்டம் நடைமுறையில் இருந்தது ஆகியவை இவ்வறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.

சில்காட் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

இராக் போருக்கு பிரிட்டன் செல்ல முடிவெடுத்ததன் பின்னணியை வினவியுள்ள சில்காட் அறிக்கை

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, இராக் போருக்கு பிரிட்டன் செல்ல முடிவெடுத்ததன் பின்னணியை வினவியுள்ள சில்காட் அறிக்கை

அமைதி வழிக்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி முடிக்காமலே, இராக் மீதான படையெடுப்பில் பிரிட்டன் இணைந்து கொண்டது. அக்காலகட்டத்தில் ராணுவ நடவடிக்கை என்பது கடைசி வழியாக இருக்கவில்லை.

ராணுவ நடவடிக்கை என்பது பிற்காலத்தில் தேவையானதாக அமைந்திருக்கலாம். ஆனால், மார்ச் 2013-இல் அப்போதைய இராக் தலைவர் சதாம் ஹுசைனிடம் இருந்த ஆயுதங்கள் பிரிட்டனுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை. சதாம் ஹுசைனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கையாளப்பட்டு, சில காலம் அவை தொடர்ந்திருக்கலாம். பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பினர்கள், இராக்கில் ஐநா ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு தொடர ஆதரவு தெரிவித்திருந்தனர்.

 சர் ஜான் சில்காட்,

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சர் ஜான் சில்காட்,
  • இராக் வைத்திருந்ததாகக் கருதப்பட்ட பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் தோற்றுவித்த ஆபத்து பற்றிய மதிப்பீடுகள் நியாயமற்ற ஒரு நிச்சயத்தன்மையுடன் முன்வைக்கப்பட்டன.
  • ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை, சதாம் ஹுசைன் தொடர்ந்து உருவாக்கி வந்தார் என்பதனை சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் உளவுத்துறை நிரூபிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty

  • பிரிட்டனின் ராணுவ நடவடிக்கைக்கு சட்ட அடிப்படை உள்ளதாக முடிவெடுக்கப்பட்ட சூழல்கள் திருப்தியளிப்பதாக இல்லை.
  • 2003 மார்ச் 20-ஆம் தேதியன்று இராக் படையெடுப்பு துவங்கியது. ஆனால், பிரிட்டன் அரசின் தலைமை வழக்குரைஞர் கோல்ட்ஸ்மித் அட்டர்னி ஜெனரல், பிரிட்டனின் ராணுவ நடவடிக்கைக்கு ஒரு பாதுகாப்பான சட்ட அடிப்படை வேண்டும் என்பது குறித்து மார்ச் 13-ஆம் தேதி வரை எந்த அறிவுரையும் வழங்கவில்லை. 13-ஆம் தேதியன்று தான் அவர் குறித்து கடிதம் எழுதினார்.
  • இதற்கு மார்ச் 14-ஆம் தேதியன்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் அளித்த பதிலினை தவிர போரில் ஈடுபடுவது குறித்து எந்த முறையான ஆவணமும் இல்லை. இராக் போரில் பிரிட்டன் ஈடுபடுவது குறித்து எந்த துல்லியமான அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என்று தெளிவாக தெரியவில்லை

பட மூலாதாரம், AP

  • இராக் போர்ப் பணியில் அமர்த்தப்பட்ட மூன்று ராணுவப் படைப்பிரிவுகளையும், போருக்கு முறையாக தயார் செய்ய மிகவும் குறைவான நேரமே இருந்தது. இது குறித்த ஆபத்துக்கள் முறையாக இனம் காணப்படவில்லை அல்லது இது குறித்து அமைச்சர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. இதனால், ஆயுத உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
  • கடந்த 2003 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில், ராணுவ கவச வாகனங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவி பெறுதல் ஆகிய முக்கிய திறன் பகுதிகளில் ஏற்பட்ட இடைவெளிகளால் பல இடர்களை இராக்கில் இருந்த பிரிட்டன் படையினர் சந்தித்தனர்.
  • பாதுகாப்புத்துறை அமைச்சக துறையில் இருந்த எந்த நபர், இத்தகைய இடைவெளிகளை அடையாளம் காண்பது மற்றும் இணைப்பது ஆகிய பொறுப்புகளில் இருந்தார் என்பது போதுமானளவு தெளிவாக இல்லை.
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட இராக்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, போரில் மிகவும் பாதிக்கப்பட்ட இராக்
  • மிகவும் வெளிப்படையான எச்சரிக்கைகளுக்கு பிறகும், இராக் மீதான படையெடுப்பின் விளைவுகள் குறைத்து மதிப்பிடப்பட்டன. சதாம் ஹுசைன் அகற்றப்பட்டப் பின்னர், இராக்கில் புதிய அரசினை நிறுவுதல் மற்றும் புணரமைப்பு பணிகளுக்கு திட்டமிடல் மற்றும் அதற்கு தயார் ஏற்பாடுகள் செய்வது ஆகியவை முற்றிலும் போதுமானதாக இல்லை.
  • இராக்கில் தனது நோக்கங்களை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது. இராக் போரினால் 200-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் குடிமக்கள் உயிரிழந்துள்ளனர். இராக் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். 2009 ஜுலைக்குள், குறைந்தது 150,000 இராக்கியர்கள் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜார்ஜ் புஷ்ஷுடன் டோனி பிளேர்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு, ஜார்ஜ் புஷ்ஷுடன் டோனி பிளேர்
  • தனது செல்வாக்கின் மூலம் இராக் போர் குறித்த முடிவுகளில் அமெரிக்காவினை கட்டுப்படுத்த முடியுமென்று டோனி பிளேர், தனது திறமையினை மிகவும் அதிகமாக மதிப்பிட்டுள்ளார் என்று சில்காட் அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பிரிட்டனின் உறவுக்கு நிபந்தனையில்லாத ஆதரவு எதுவும் தேவைப்பட்டதில்லை.
  • வெளிப்படையான மற்றும் தகவல் பரிமாற்றத்துடன் கூடிய விவாதம் மற்றும் சவாலை அமைச்சக கலந்துரையாடல்கள் ஊக்குவிப்பது மிகவும் இன்றியமையாதது.
  • எதிர்காலத்தில், அயல்நாட்டு விவகாரங்களில் பிரிட்டனின் எவ்விதமான ஈடுபாடும், அதன் அனைத்து அம்சங்களும்மிகவும் தீவிரமாகவும் கணக்கிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, சவால்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதன் முடிவுகள் முழுமையாக செயல்படுத்தபட வேண்டியது மிகவும் அவசியமாகவும்.