ஒபாமா - தலாய் லாமா சந்திப்பு: சீனா அதிருப்தி

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் தலாய் லாமா இடையே சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவிடம் ஒரு முறையான புகாரை சீனா அளித்துள்ளது.

கோப்பு படம்

பட மூலாதாரம், THE WHITE HOUSE

படக்குறிப்பு, கோப்பு படம்

நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவுடன், இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

இச்சந்திப்பு, சீனாவிலிருந்து திபெத்துக்கு விடுதலை கோரும் பிரிவினைவாத சக்திகளுக்கு தவறான செய்தியை அளிக்கும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் லு காங் கூறியுள்ளார்.

சீனாவுடனான ராஜிய உறவுகளை பராமரிக்கும் முயற்சியாக மேற்கூறிய சந்திப்பு குறித்த ஊடகக் காட்சி தொகுப்புக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.