துப்பாக்கிச்சூடு குறித்து போலிசுக்கு அமைதியாகவும், பதட்டமின்றியும் தகவல் கொடுத்த ஒமர் மடீன்

ஃபுளோரிடாவில் உள்ள ஒரு பாலுறவுக்காரர்கள் கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 49 பேரை கொன்ற நபர் இந்த தாக்குதல் குறித்து தங்களை தொலைபேசியில் அழைத்தபோது, அமைதியாகவும், பதட்டமின்றியும் இருந்தார் என அமெரிக்க போலிஸ் தெரிவித்துள்ளது.

நவீன அமெரிக்க வரலாற்றில் ஒரு மோசமான படுகொலையை நிகழ்த்தி உள்ள ஒமர் மடீன், ஐ.எஸ் அமைப்பினரின் விசுவாசியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images

அந்த கேளிக்கையகத்திற்கு சென்றவர்கள் பலரை ஆயுதம் ஏந்திய போலிசார் காப்பாற்றியதாகவும்,

அவர்கள் கவச வாகனத்தை பயன்படுத்தி சுவரில் துளை போட்டு உள்ளே இருந்த பலரை தப்பிக்க செய்ததாகவும் ஓர்லாண்டோ நகரின் போலிஸ் தலைவர் ஜான் மினா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரி ஒமர் மடீனும் அந்த துளை வழியாக வெளியே வந்தார், ஆனால் அவரை போலிசார் சுட்டுக் கொன்றார்கள்.