பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார்

பட மூலாதாரம், AP

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார்.

அவருடைய வயது 74.

பட மூலாதாரம், AP

அதிக எடைப்பிரிவில் மூன்று முறை உலகப்பட்டங்களை வென்றுள்ள முகமது அலி கடந்த வியாழன் அன்று சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 1984ல் பார்கின்சன்ஸ் நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Getty

அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவர் ஓய்வு பெற்றார்.

அமெரிக்காவின் தென் பகுதி மாகாணமான கென்டக்கியில் முகமது அலி பிறந்தார். அவருடைய இயற் பெயர் காசியஸ் க்ளே.

1964ல் தன்னுடைய முதல் உலக பட்டத்தை வென்றவுடன் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்.