நவாஸ் ஷெரிபுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் திறந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட நவாஸ் ஷெரிப்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட நவாஸ் ஷெரிப்

தனது தந்தை குறித்த இச்செய்தியை, ஷெரிபின் மகள் மரியம் டிவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷெரிபின் அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவு பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் மரியம் தெரிவித்துள்ளார்.

66 வயதாகும் ஷெரிப், நாடு திரும்பும் முன் பூரணமாக குணமடைய மருத்துவமனையில் ஒரு வார காலம் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் பணக்கார மனிதர்களில் ஒருவராக ஷெரிப் பரவலாக கருதப்படுகிறார்.

அறுவை சிகிச்சைக்கு ஆன செலவுகள் முழுவதையும் தன் சொந்த பணத்திலிருந்து பிரதமர் அளித்ததாக ஒரு பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்தார்.