பிரான்சில் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

பிரான்சில் மர்சேய்யில் நகரத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் மீது பிரெஞ்சு போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.

பட மூலாதாரம், Reuters

போராட்டக்கார்கள் தங்கள் மீது கற்களையும், எரியும் தடுப்பரண்களையும் அமைத்து வலுவான எதிர்ப்பை தெரிவித்தனர் என்று போலிசார் கூறினர்.

இதில் பல அதிகாரிகள் காயமடைந்தனர். போஸ் -சூர்-மெர் என்ற இடத்தில் நடந்த இந்த போராட்டம் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நடக்கும் தொடர் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஒரு பகுதியாகும்.

இந்த சர்ச்சை மற்றும் லாரி ஓட்டுநர்களின் முற்றுகை காரணமாக , எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத உற்பத்தி தடைபடும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பல பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீரும் நிலை உள்ளது.