கம்போடியாவில் புத்தரின் உடல்பகுதிகளைக் கொண்ட தங்கக் கலசம் மீட்பு
கம்போடியாவில் புத்தரின் உடல்பகுதிகள் வைக்கப்பட்டுள்ளன என நம்பப்படும் தங்கக் கலசம் ஒன்று காணாமல்போன பிறகு மீட்கப்பட்டுள்ள நிலையில், அது மீண்டும் மலையுச்சியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பட மூலாதாரம், AP
இதையொட்டி தலைநகர் நாம் பென்னில் நடைபெற்ற வண்ணமிகு ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான கம்போடிய மக்கள் பங்குபெற்றனர்.
இந்த நிகழ்வு பௌத்த அட்டவணையில் மிகவும் புனிதமாக கருதப்படும் நாளான வெசாக் தினத்தன்று நடைபெற்றுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த ஆலயத்தின் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர்.








