செர்னோபில் அணு விபத்து: 30 ஆண்டுகள் நிறைவு

பட மூலாதாரம், AFP
செர்னோபிலில் நடந்த உலகின் மிக மோசமான அணு விபத்தின் 30-வது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வுகளை யுக்ரெய்ன் நடத்துகின்றது.
1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த அணு ஆலையின் உலை உருகி வெடித்தபோது, ஆலையின் கூரை பிடுங்கி எறியப்பட்டு மண்டலமாகக் கிளம்பிய கதிரியக்க பொருட்கள், யுக்ரெய்னின் எல்லையை கடந்து அண்டையில் உள்ள பெலாரஸிலும், வடக்கு ஐரோப்பா எங்கிலும் பரவியது.
அந்த விபத்து நடந்த உடனேயே பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களுமாக 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், அடுத்த பல மாதங்களில் அங்கிருந்து வெளியான கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்ட நோய்களால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
அந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்றுவரை விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்துவருகின்றது.
செர்னோபில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தேவாலயங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.








