எலிசபெத் அரசிக்கு 90 வயது
பிரிட்டனின் எலிசபெத் அரசி இன்று(வியாழக்கிழமை) தனது 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பட மூலாதாரம்,
இதையொட்டி விண்டஸரில் அவர் எடின்பரோ கோமகனுடன் நடந்து செல்லும்போது, பொதுமக்களை சந்திக்கிறார்.
பின்னர் பிரிட்டனை மிகநீண்ட காலமாக ஆட்சி செய்துவரும் அரசியார், நாடுமுழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படவுள்ள ஆயிரம் ஒளிவிளக்குகளில் முதலாவதை ஏற்றுவார்.
கடந்த 64 ஆண்டுகளுக்கு அதிகமாக அவர் பிரிட்டனின் அரசியாக உள்ளார்.








