சவுதி அரேபியாவில் மதக்காவல்துறையினருக்கு கட்டுப்பாடுகள்
சவுதி அரேபியாவில் மதத்துறைக்கு பொறுப்பான காவல்துறையினரின் அதிகாரங்களை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பட மூலாதாரம், Getty
அந்தக் காவல்துறையினர் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என அண்மைய ஆண்டுகளில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
புதிய விதிகளின்படி, மதத்துறை காவலர்கள் யாரையும் துரத்திப் பிடித்து கைது செய்வது, அடையாள ஆவணங்களைக் கேட்பது ஆகியவை தடை செய்யப்படும்.
இந்த ஒழுங்குமுறை விதிகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள கடுமையான மத மற்றும் சமூக நெறிமுறைகளை யாராவது மீறுவதை மதக்காவல்துறையினர் கண்டால், இனி அவர்கள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்காமால், பொதுவான காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதன் பிறகு பொதுக் காவல்துறையே சந்தேக நபர்கள் மீதான நடவடிக்கையை முன்னெடுக்கும்.








