லாகூர் தாக்குதல்: குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ராணுவம் தீவிரம்

பாகிஸ்தானின் லாகூரில் நேற்று ஞாயிறன்று நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பாவர்களை தேடிபிடிக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பாகிஸ்தானின் இராணுவம் உறுதி அளித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 29 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, இந்தத் தாக்குதலில் குறைந்தது 29 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பல குடும்பங்கள் இருந்த பூங்கா ஒன்றில் வெடித்த இந்த குண்டினால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் தாலிபான் அமைப்பிலிருந்து பிரிந்துச் சென்ற ஜமாத் உல் அஹ்ரர் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்களின்போது லாகூரின் கிறிஸ்தவ சிறுபான்மையினரை இலக்கு வைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

காயமடைந்த சிலரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட பிரதமர் நவாஸ் ஷரிஃப், இதற்கு பதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்தார்.

இந்தத் தாக்குதலையடுத்து, பஞ்சாப் மாகாணத்தில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் 29 சிறார்கள் உட்பட 70க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறார்கள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, சிறார்கள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள்.

சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவுக்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தப் பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

பட மூலாதாரம், Rai Shahnawaz

இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறார்கள், பெரியோர்கள் என பலர் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிய தாலிபான்களின் ஒரு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பிரிட்டனுக்கான தமது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.