ஆசிய பசிபிக் கடலில் கடற்படை வல்லமையை அதிகரிக்கும் ஆஸி; சீனா கோபம்
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது கடற்படையின் வல்லமையை பலப்படுத்துவதும் ஆஸ்திரேலியாவின் திட்டத்திற்கு சீனா கோபத்துடன் பதில் அளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty
இந்தத் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ள சீன வெளியுறவு அமைச்சு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு இது எதிர்மறையானது என்றும் கூறியுள்ளார்.
பிராந்தியத்தில் ஒரு ஆயுதப் போட்டியை காண விரும்பவில்லை எனவும் சீனா கூறியுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில், 140 பில்லியன் டாலர் நிதியை பாதுகாப்புக்காக செலவிடவுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது.
பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சவால்களை எதிர்கொள்ள, தனது நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.
தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடற்பரப்பில் நிலவும் பதற்ற சூழ்நிலையையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளது.








