பேஸ்புக் கருத்துக்கு சிங்கப்பூர் செவிலிக்கு சிறைத்தண்டனை

பட மூலாதாரம், AFP
சிங்கப்பூர் குறித்து ஆத்திரமூட்டக்கூடிய கருத்துக்களை சமூக ஊடகமான முகநூலில் பதிவிட்டார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த செவிலி ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரிந்த எலோ எட் முண்ட்சல் பெலோ சிங்கப்பூர் குடிமக்கள் தோற்றுவிட்டவர்கள் என்று தனது முகநூலில் எழுதியிருந்தார்.
தேசத்துரோகமிழைத்தது மற்றும் காவல்துறையிடம் பொய் கூறியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இந்த தண்டனையின் நியாயத்தை விளக்கிய நீதிபதி, சமூக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலான கருத்துக்களை நீதிமன்றம் புறந்தள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
பல்லின சமுதாயத்தினரும் வாழும் சிங்கப்பூரில் இனரீதியாக பதற்றத்தை உண்டுபண்ணும் கருத்துக்கள் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.








