வானிலை ஆய்வு மையத்துக்கு வெளியில் துருவக் கரடிகள் சண்டை

ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு வெளியில் துருவக் கரடிகள் சண்டையில் ஈடுபட்டதால், ஆய்வாளர்கள் மையத்தைவிட்டு வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.

வெடிகளை வெடித்து துருவக் கரடிகளை விரட்ட ஆய்வாளர்கள் முயற்சித்தனர்.

பட மூலாதாரம், BBC World Service

படக்குறிப்பு, வெடிகளை வெடித்து துருவக் கரடிகளை விரட்ட ஆய்வாளர்கள் முயற்சித்தனர்.

ரஷ்யாவின் வடகோடியில் அமைந்திருக்கும் அமைந்திருக்கிறது.

அங்கிருக்கும் ஆய்வாளர்கள் கடலின் வெப்பநிலையை அளப்பதற்காக தினமும் செல்வது வழக்கம்.

துருவக் கரடிகள் அங்கேயே சண்டையிட்டுக் கொண்டிருந்ததால், ஆய்வாளர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

பட மூலாதாரம், BBC World Service

படக்குறிப்பு, துருவக் கரடிகள் அங்கேயே சண்டையிட்டுக் கொண்டிருந்ததால், ஆய்வாளர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

ஆனால், குறிப்பிட்ட தினத்தில் உணவைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக அந்த வானிலை மையத்திற்கு வெளியில் இரு துருவக் கரடிகளுக்கு இடையில் சண்டை வெடித்தது.

ஆய்வாளர்களிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லாததால், தீயை மூட்டி அந்தக் கரடிகளை விரட்டப்பார்த்தனர். ஆனால், அவை அதற்குப் பயப்படவில்லை.

வேகச் தீவில் அமைந்திருக்கும் ஃப்யோதொரோவ் வானிலை ஆய்வு மையம்.

பட மூலாதாரம், BBC World Service

படக்குறிப்பு, வேகச் தீவில் அமைந்திருக்கும் ஃப்யோதொரோவ் வானிலை ஆய்வு மையம்.

மேற்கில் முர்மான்ஸ்க்கிலிருந்து கிழக்கில் சுகோட்கா வரை ரஷ்யாவின் ஆர்டிக் கரை நெடுக, துருவக் கரடிகள் வசிக்கின்றன.

சமீப ஆண்டுகளில் துருவக் கரடிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.