'பாலியல் அடிமைகள்':ஜப்பானில் தொடரும் சர்ச்சை

இரண்டாவது உலக யுத்தம் குறித்து எழுதும் அறிஞர்கள் ஜப்பானில் சந்திக்க நேருவதாக கூறப்படும் அதிகாரவர்க்கம் மேற்கொள்ளும் திருத்தியமைத்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் தணிக்கை ஆகியவற்றை ஜப்பான் அரசு நிறுத்தவேண்டும் என்று நூற்றி எண்பதுக்கும் மேற்பட்ட வரலாற்றாய்வாளர்கள் கூட்டாக எழுதிய பகிரங்கக் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலக யுத்ததின் போது ஜப்பானிய இராணுவத்தினரின் நடத்தை குறித்து கேள்விகள்
படக்குறிப்பு, இரண்டாம் உலக யுத்ததின் போது ஜப்பானிய இராணுவத்தினரின் நடத்தை குறித்து கேள்விகள்

இரண்டாம் உலகயுத்த காலத்தில் ஜப்பானிய ராணுவத்தின் விபச்சார விடுதிகளில் சீனா மற்றும் கொரிய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நீடிக்கும் சர்ச்சையைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பெண்கள் ஜப்பானிய இராணுவத்தால் பலவந்தமாக இந்த தொழிலுக்குள் சேர்க்கப்பட்டனர் என்று எழுதப்பட்டிருக்கும் பாட புத்தகங்களை வெளியிடும் அமெரிக்க பதிப்பகங்களிடம் இந்த தகவலை திருத்தும்படி ஜப்பானிய அரசு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவருகின்றன.

வரலாற்றை ஆய்வு செய்வதற்கான சுதந்திரத்தை எல்லா நாட்டு அரசுகளும் பாதுகாக்கவேண்டும் என்றும் இந்த கடிதம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கடந்தகாலத்தில் நடந்த தவறுகளை ஏற்றுக்கொள்வது ஜனநாயக சமூகத்தை வலுப்படுத்துவதோடு, சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் சுகம் தரும் பெண்டிர் என்று ஜப்பான் வர்ணிக்கும் இந்த பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து ஜப்பான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரவில்லை