மலாலாவைச் சுட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுஃப்ஸாய் மீது 2012ஆம் ஆண்டில் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்திய பத்து பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

அந்த சமயத்தில் 15 வயதுப் பெண்ணாக இருந்த மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் அவரது பள்ளிப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக 2014ல் மலாலாவுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள், பாகிஸ்தானிய தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.








